நல்குரவு - வறுமை
****************
கந்தல் கந்தலாய்
ஆடையுடுத்திக் கொண்டவனொருவன் !
கலைந்த தலையுடன்
கால் வயிற்றுச் சோற்றுக்காய்
அனல் கொதித்திடும்
சூளையில் உழைத்திடுபவனொருவன் !
தூங்கும் நேரமதிலும்
ஓடிக் கொண்டிருப்பவனொருவன் !
அமர்ந்து இளைப்பாறக் கூட
நேரமில்லாத கூலித்தொழிலாளியொருவன் !
பகல் முழுவதும்
அலைந்து இரவானதும்
படுத்துறங்க வீடில்லாத
வீதி வாசியொருவன் !
பிள்ளைகளின் பசிபோக்கிட
உடல் விற்கும் விலைமாதுவொருவள் !
கையேந்தி நின்றவனொருவன்
அனைவரின் இந்நிலை அறிந்தும்
கண்டும் காணாது
போனவர்கள் ஏராளம்
கோடி கோடியாய் இருந்த போதும்
கொடுத்துவிட மனமில்லாத மனிதர்கள்
இவர்கள் வசதியாய் இருந்தும்
வறுமையில் வாழ்பவர்களே !
தமிழன்னை
ஆசியுடன்
அன்புதமிழன் 

No comments:
Post a Comment