வாழ்வது_சிறக்கத்_திருக்குறளே..
அறனை விதைத்த குறளாவாய்
_ அகிலம் சிறக்கத் துணையாவாய்..!
புறத்தில் புதுமைப் பொழிவுடனே
_ பொய்மை நாளும் தவிர்த்திடுவாய்..!
_ அகிலம் சிறக்கத் துணையாவாய்..!
புறத்தில் புதுமைப் பொழிவுடனே
_ பொய்மை நாளும் தவிர்த்திடுவாய்..!
அன்பின் வழியில் நடப்போர்க்கு
_ அறமே
வாழ்வில் நிலைத்திருக்கும்..!
பண்பின் நெறியைப் பின்பற்றிப்
_ பகுத்தே நீயும் வாழ்ந்திடுவாய்..!
பண்பின் நெறியைப் பின்பற்றிப்
_ பகுத்தே நீயும் வாழ்ந்திடுவாய்..!
குடியை உயர்த்த நினைப்பவர்க்கு
_ குடியும் கெடுமே சோம்பலினால்..!
குடியில் பெருமை உடையோரும்
_ குற்றம் புரியார் ஒழுக்கத்தில்..!
_ குடியும் கெடுமே சோம்பலினால்..!
குடியில் பெருமை உடையோரும்
_ குற்றம் புரியார் ஒழுக்கத்தில்..!
நட்பின் பெருமை அறிவதற்கே
_ நயமாய் பலவும் குறளுண்டு..!
நட்பே யென்றும் இடித்துரைத்து
_ நலமும் வாழ்வில் விளைவிக்கும்..!
_ நயமாய் பலவும் குறளுண்டு..!
நட்பே யென்றும் இடித்துரைத்து
_ நலமும் வாழ்வில் விளைவிக்கும்..!
தேனாய்க் குறளைக் கற்றிடவே
_ தெவிட்டா யின்பம் சுரந்திடுமே..!
ஊனாய் உயிராய் விரும்பியதை
_உள்ளம் மகிழக் கற்பீரே..!
_ தெவிட்டா யின்பம் சுரந்திடுமே..!
ஊனாய் உயிராய் விரும்பியதை
_உள்ளம் மகிழக் கற்பீரே..!
மெய்யாய் குறளும் செப்பிடுமே
_மேன்மை மிகுந்த வாழ்வியலை..!
அய்யன் காட்டிய வழியிதுவே
_ அழகிய நூலாம் திருக்குறளே..!
_மேன்மை மிகுந்த வாழ்வியலை..!
அய்யன் காட்டிய வழியிதுவே
_ அழகிய நூலாம் திருக்குறளே..!
கவிஞர் அனுராஜ்..
போடிநாயக்கனூர்..
No comments:
Post a Comment