வான் சிறப்பு
தண்ணீரின்
தேவையதை அன்றே உணர்ந்தாரே;
திருவள்ளுவர்
எனும் தமிழ்ப் புலவரும்!!
வான்சிறப்பு
எனும் அதிகாரத்திலே!
நீரின் றமையா
துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா
தொழுக்கு.
எனும்
கருத்துமிக்க வரிகளை
விதைத்துச்
சென்றாரே!!
நீரின்றி
அமையாது உலகு எனத்
தரணிக்கு
எடுத்துரைத்துச் சென்றாரே அவரும்!!
சுயநலத்தின்
உருவமாய் மாறிய மனிதனும்;
சீறும்
இயற்கையை அழிக்கத் துணிந்தானே!!!
தன்னலம்
மட்டுமே சுவாசித்த மனிதனும்;
தண்ணீரின்
மூச்சான மரங்களை அழித்தானே!!
பல மரங்கள்
இருந்த இடங்களிலே;
பல மாடி
கட்டிடங்கள் எழுப்பினானே!!!
மதிப்பு
மிக்க விளைநிலங்களை விடுகளாக்கினானே;
மழைநீரும்
கடலினிலே கலப்பதை அறயாமலே!!
மனிதனின்
இந்த மாபெரும் தவறாலே;
மழையும்
இங்கு பொய்த்துப் போனதே!!
மண்ணின்
வளமும் இங்கு குறைந்ததே!!
மண்ணடி
நீரும் இங்கு வற்றியதே!!
தண்ணீரின்
அவசியம் அதை உணர்த்திடவே,
தரமான
விழிப்புணர்வு போட்டி அதையும்;
தன் இளைய
தலைமுறைக்கு வைத்திட்டே;
தண்ணீரின்
தேவையை உணர்த்திட வேண்டுமே!!!
வீடுகள்
தோறும் மரங்களை நட்டிடுவோமே!!
வீடுகளில்
மழைநீரை சேகரித்திடுவோமே!!
வருங்கால
தலைமுறையும் தவிக்காமல் இருக்கவே;
வளமான நீரை
சேமித்திடுவோம் நாமும்!!!
நீரின்றி
அமையாது உலகென உணர்ந்திடுவோமே நாமும்!!!
நீரின்றி
அமையாது உலகு!!
கோமதி
முத்துக்குமார்
திருவில்லிபுத்தூர்
விருதுநகர்
மாவட்டம்
9940361567
No comments:
Post a Comment