இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 12 February 2020

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் 15 ஆம் ஆண்டுவிழா


தேனிவையைத் தமிழ்ச்சங்கத்தின் 15 ஆம் ஆண்டுவிழா திருக்குறள் முப்பால் கவியரங்கம், நூலரங்கம், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கல் என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. 
   
விழாவுக்குத் தேனி  வையைத் தமிழ்ச்சக்க நிறுவனர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமை வகித்தார்.கவிஞர் பா.செல்வக்குமரன் அனைவரையும் வரவேற்றார். சங்கத் தமிழ் அறக்கட்டளையின் பொருளாளர்  பெ.சிவக்குமார் , மேனாள் நகர்மன்ற உறுப்பினர் ஆப்பிள்முருகன், கோவை முத்தமிழ்மன்றத் தலைவர் செளந்திரராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

செந்தமிழ் இலக்கியமன்றத் தலைவர் திரு க.நந்தகோபால் அவர்கள் வாழ்த்துரை வழங்க, வாசிக்கலாம் வாங்க குழுவின் தலைவர் கவிஞர் பெ.அந்தோணிராஜ் அவர்கள் விழாவினைத் தொடங்கிவைத்தார்.

   அதனைத் தொடர்ந்து திருக்குறள்த் திருவிழாவாகா திருவள்ளுவரின் புகழ்பாடும் முப்பால் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தை முனைவர் பத்மினிபால, கவிஞர் மூ.செல்வம், கவிஞர் சா. தமிழ்ச்செல்வி, கவிஞர் சி.ஜெயபாண்டி ஆகியோர் வழிநடத்தினர். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் பாடி திருவள்ளுவருக்குப் புகழ்சேர்த்தனர்.

    தொடர்ந்து முனைவர் பத்மினி பாலா அவர்கள் எழுதிய பக்தியின் மொழி தமிழ் என்னும் நூல்குறித்து கவிஞர் பா.கவிதா கி.நி.அ., அவர்களும், கவிஞர் அ.லட்சுமி குமரேசன் எழுதிய பனித்துளிகள்  நூல்குறித்து  சங்கத்தமிழ் அறக்கட்டளையின் செயலாளர் மா.தங்கப்பாண்டியன் அவர்களும் ஆய்வுரை நிகழ்த்தினர்.

  நிகழ்வில் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த இரட்டையர் அ.சாலினி அ.சாமினி, மற்றும் 400 குறட்பாக்களை ஒப்புவித்த நான்கு வயதுச் சிறுமி  அ.ரோசினி ஆகியோருக்கு உரூ.ஆறாயிரம் கல்வி உதவித்தொகையும், 300 கும் மேற்பட்ட மரபுக்கவிஞர்களை உருவாக்கியமைக்காக மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் சென்னை, சங்க இலக்கிய நூல்களான 36 நூல்களைக் கட்டுரை வடிவில் தொகுப்பித்தமைக்காக கோவை தி.செளந்திரராசன் ஆகியோருக்கு தமிழ்த்தொண்டர் என்னும் விருதினையும்,  வளரும் தலைமுறையினருக்குத் திருக்குறள் கற்பித்துவரும்  தே.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த அ.ஜெயமணி அவர்களுக்குத் திருக்குறள்த் தொண்டர் என்னும் விருதினையும், தமிழிலக்கியச் சேவைக்காகத் தமிழாசிரியர் ச.கார்த்திகேயன் அவர்களுக்குத் தமிழ்ச்சுடர் என்னும் விருதினையும் தொழிலதிபர் ம.கருணாகரன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

   தொடர்ந்து திருக்குறள் முப்பால் கவியரங்கில் கலந்துகொண்டு கவிதைபாடிய அனைத்துக் கவிஞர்களுப் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த கவிதைகளுக்காகத் தேர்வுசெய்யாப்பட்ட கவிஞர்கள் கற்பனைக் கவிஞர் கி.சுப்புராம் தேனி,  கவிஞர் சுந்தரம்பாண்டி மதுரை, கவிஞர் புனிதா பாண்டியராஜ் அருப்புக்கோட்டை, கவிஞர் அனுராஜ் போடி ஆகியோருக்கு ஆகியோருக்கு விருதுச் சான்றிதழ்களும் வழங்கப்ப்டன. 

     விருதுச் சான்றிதழ்களை திரு க.க.ஜெயராம் தே.மே.இ.நா.உறவைமுறை சொத்துப் பாதுகாப்புச் செயலர்,  முனைவர் பேரா.சீ.வெங்கடேஸ்வரன், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் ஆப்பிள்முருகன் பெரியகுளம் வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் பொன்.பாலமுருகன், சிவசக்தி அக்ரோ ஏஜென்சீஷ் உரிமையாளர் கபில்தேவ், கவிஞர் அ.பாண்டியமிகிழன் ஆகியோர் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் & சங்கத்தமிழ் அறக்கட்டளை தேனி சார்பில் வழங்கிச் சிறப்பித்தனர்.

    நிறைவாக  தேனிவையைத் தமிழ்ச்சங்கத்தின் துணைச் செயலர் இரா.மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment