தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி....
தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் வழிகாட்டுதலில் உலகத் தொல்காப்பியத் தூதர் விருது பெற்ற முத்தமிழ் சாமினி செந்தமிழ் சாலினி ஆகியோரது தொல்காப்பியச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கும் பணமுடிப்பும், விருதும் வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கும், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்குநர் உள்ளிட்ட அரசு அலுவலர் அனைவருக்கும், தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், உத்தமபாளையம் வட்டாச்சியர் அவர்களுக்கும், நன்றி....
மற்றும் இந்த தொல்காப்பியக் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைநின்ற செந்தமிழ் இலக்கிய மன்றம் சின்னமனூர், உலகத் தொல்காப்பியர் மன்றம் அமெரிக்க, மதுரை தொல்காப்பியர் மன்றம், கோவை தொல்காப்பியர் தமிழ்ச் சங்கமம் உலகத் திருக்குறள் சமுதாய மையம் புதுச்சேரி, உலகத் தமிழ்க்கூடல், தேனீக்கள் அறக்கட்டளை கம்பம், தேனி மனிதநேயக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் நன்றி.
மேலும் உலகத் தொல்காப்பியர் தூதுவர்களின் வளர்ச்சிக்குத் துணை நின்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி...
No comments:
Post a Comment