உலகின் முதல் தொல்காப்பியத் தூதர் விருது பெற்ற உலகச் சாதனையாளர்களை
வாழ்த்துகிறது வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.
உலகத் திருக்குறள் சமுதாய மையம் ஏற்பாடு செய்த தொல்காப்பியம் மனன முற்றோதல் (03-04-2022) காலை 4.45 மணிக்கு நிறைவுற்றது.
இந்நிகழ்வில் தேனி வையயைத் தமிழ்ச்சங்கத்தின் வழிகாட்டுதலின் மூலம் கலந்துகொண்டு
இந்த நிகழ்வினை நடத்திய திருக்குறள் மாமணி செல்வி அ. முத்தமிழ் சாமினி, திருக்குறள் மாமணி செல்வி அ.செந்தமிழ் சாலினி ( எட்டாம் வகுப்பு) ஆகிய சகோதரிகள் , தொடர்ந்து 12 மணி நேரம் தொய்வு இல்லாமல் நிகழ்த்தி, உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
உலகத்தில் மாணவிகள் இருவர் தொல்காப்பியம் முழுவதும் ஆறு சுற்று அமைவில், மனனம் முறைமையில் முற்றோதல் செய்துள்ளமை, இதுவே முதன்மை. இதுவே உலகச் சாதனை.
இந்த நிகழ்வினைக் கண்காணித்த, புதுச்சேரி அகில இந்தியா உலகச் சாதனை பதிவு மையத்தின் நிறுவனர் , தலைவர், உலகச் சாதனை நாயகர் திருக்குறள் முனைவர் வேங்கடேசன் அவர்கள், இவ்விரு மாணவிகளை வாழ்த்தி, "தொல்காப்பியத் தூதர்" என்னும் உயரிய விருதினை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளார்.
திருக்குறள் மாமணி செல்வி அ. முத்தமிழ் சாமினி, திருக்குறள் மாமணி அ. செந்தமிழ் சாலினி.
No comments:
Post a Comment