தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான "தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி" இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவ மாணவியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் தூய தமுழ்ப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
80 தலைப்புகள் இந்த போட்டியில் கொடுக்கப்ப்பட்டன. ஒவ்வொரு தலைப்பிலும் மாணவ-மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆங்கிலம் கலவாமலும், பிறசொல் தவிர்த்தும் அருமையாக பேசினார். ஐந்து சுற்றுகளாகப் போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள்...
வரிசைப் படி
1. அ.முத்தமிழ் சாலினி தேவாரம்,தேனி
2.க.ரா.விசாலி, மேல்மருவத்தூர்.
3. செ.காவியா சென்னை
4. மோகனசிவானி ராசபாளையம்
5.தேசிகாஸ்ரீ இராசபாளையம்
6.ரக்சிதா திருவள்ளூர்
7.கிருபானிகா இராசபாளையம்
8.அ.சு.யாழினி திருச்சி
8.சுபிக்சா நாகப்பட்டினம்
9.முவேதா கோவில்பட்டி
10. செந்தமிழ் சாமினி தேவாரம் தேனி பத்துப் பேர் வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கான பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அனுப்பிவைக்கப்பட்டது
மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியினை தமிழ்ச்செம்மல் முத்துமணி, கவிஞர் லட்சுமி குமரேசன், கவிஞர் மூ.செல்வம், கவிஞர் செல்வராணி ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். தூய தமிழ்ப் பேச்சுப்போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையினை கவிஞர் லலிதாசியாம், நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார், வழக்குரைஞர் ஆசைத்தம்பி ஆகியோர் இணைந்து வழங்கினர். நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வினை தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும் உலகத் தமிழ்க்கூடல் அமைப்பாளருமான புலவர் ச.ந.இளங்குமரன் இணைய வழியில் ஒருங்கிணைத்துச் செயல் படுத்தினார். நிகழ்வு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பானது.
No comments:
Post a Comment