நீங்களும் வாழ்த்தலாமே...!
(தேனி மாவட்டம் - போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளி 03-02-2022)
தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ்க் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் சொல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
போட்டியினை கவிஞர் லட்சுமி குமரேசன் அவர்களும் கவிஞர் செல்வராணி அவர்களும் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
வெற்றி பெற்றவர்களைத் தாண்டி கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் சிறப்புப் பரிசும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. அவ்வகையில் திருக்குறள் சொல் போட்டியில் கலந்துகொண்ட
தேனி மாவட்டம் போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவி அபிநயா அவர்கள் மாநில அளவில் இரண்டாம் பரிசினைப் பெற்றார். மாணவிக்கு புலவர் இராசேந்திரனார் வழங்கிய பணமுடிப்பும், மற்றும் பா.முனீஸ்வரி
சீ.தமிழ்க்குமாரன்
அ.கௌசிக்
கா.வீரஹர்சினி
செ.ஜனகீர்த்தன். ச.ஹர்சிதா
பா.ரமணி என கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு செந்தமிழ்த் தேனியார் வழங்கிய சிறப்புப் பரிசும், வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நூலும், உலகத் தமிழ்க்கூடல் சார்பில் தலைமையாசிரியர் முன்னிலையில் பங்கேற்புச் சான்றிதழும், வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மாணவிகளை போட்டிக் களத்திற்கு தயார் செய்து வழிநடத்திய லட்சுமி ஆசிரியர் அவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்களுக்கும் நன்றி.
உலகத் தமிழ்க்கூடல் தமிழ்செம்மல் முத்துமணியார், நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார் உள்ளிட்ட பேராளுமைகளுக்கு நன்றி...
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment