நூல் வெளியீட்டு விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனியார் மண்டபத்தில் வையைத் தமிழ் சங்கம் & வையைப் பதிப்பகம் தேனி நடத்தும் முனைவர் பேராசிரியர் சே .பத்மினி பாலா அவர்களது "மேடை பூக்கள் " கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. புலவர் இளங்குமரன் தலைமையேற்று சிறப்புரை செய்தார். பொன்பாலமுருகன் தலைவர் வழக்கறிஞர் வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தி சிறப்புரையாற்றினர். புலவர் ராஜரத்தினம் ,MKM முத்துராமலிங்கம ,சந்திரசேகர்,செல்லப்பாண்டியன் , ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார் .நூல் வெளியீடுபவர் வி எஸ் பி கண்ணகி சேகர் , நூல் பெறுபவர் PT சிதம்பர சூரியவேலு நூல் மதிப்புரை கவிவித்தகர் பொற்கைப்பாண்டியன் நூலைப்பற்றி சிறப்புரையாற்றினார். மு அர்ச்சுனன், மா. தங்கப்பாண்டியன் நூல் குறித்து உரையாற்றினார்.நூலாசிரியர் சே .பத்மினி பாலா ஏற்புரையாற்றினார். ஈஸ்வர்ராஜா, நீலப்பாண்டியன்,அன்புக்கரசன், பாண்டிமகிழன் லட்சுமி, மணிகார்திக், கணேசன், கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .இந்நிகழ்வில் வைகை தமிழ் சங்கம் தேனி , சங்கத் தமிழ் அறக்கட்டளை நண்பர்கள் கலந்து கொண்டனர். இச்சிறப்பு ஏற்பாட்டினை வழக்கறிஞர் பாலமுருகன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். இவருடைய சிறப்பு அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார். தமிழக அரசின் உத்தரவின்படி முகக்கவசம் கிருமிநாசினி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது .
மிகச் சிறப்பு ஐயா 🌹🙏
ReplyDeleteபேரன்பும் பெருமகிழ்வும்