நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் 29 ஆம் ஆண்டு விழா 14-01-2022 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி, தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் தமிழர் திருநாள் விழாவாக நாகலாபுரம் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
தை முதல் நாளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை இரா.மு.சிவராமன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 40 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலை நிகழ்வாக "இன்றைய பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சமுதாயத்திற்கு வளர்ச்சியா? தளர்ச்சியா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது பட்டிமன்றத்திற்கு பீட்டர்பால்ராஜ் ஆசிரியர் தலைமை வகித்தார். வளர்ச்சியே என்ற அணியில் மு.திலகவதி, ஆ.கவியரசி, நிவேதா ஆகியோரும், தளர்ச்சியே என்ற தலைப்பில் பா.கவிச்செல்வன், மா.பா.மெய்கண்டார், க.தமிழழகு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
அதனை தொடர்ந்து "தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது நேற்று தலைப்பில் தமிழாசிரியை அ.கிருஷ்ணவேணி, இன்று தலைப்பில் இரா.மருது, நாளை என்ற தலைப்பில் மு.கருப்பசாமி ஆகியோர் மிகச் சிறப்பாகப் பேசினர். இந்த இனிய நிகழ்வுக்கு மருத்துவர் சி.இராமசாமி தலைமை தாங்க, பா.தமுழ்ச்செல்வன் வரவேற்க, கு.கார்த்திக் நன்றியுரை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து புலவர் ச.ந.இளங்குமரன் தொகுப்புரை ஆற்றினார்.
15-01-2022 நாள் காலை 10 மணிமுதல் மாலை 6-00 மணிவரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரவு 7-00 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. விழாவிற்கு திருவள்ளுவர் மன்றத் தகைவர் பா.அமுதவல்லி தலைமை வகித்தார். பெரியகுளம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் பொன்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். பெரும்புலவர் இளங்குமரனார் அவர்களுக்கு நினைவேந்தலோடு நிகழ்வு தொடங்கியது. இரா.மு.சேதுபதி வரவேற்க, அ.முருகன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பி கவிஞர் பா.கவிதா மற்றும் முனைவர் பத்மினிபாலா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னிலை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு திருவள்ளுவர் மன்றம் மற்றும் சிவசங்கர் அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
திருக்குறளில் உலகச் சாதனை படைத்த முத்தமிழ் சாமினி, செந்தமிழ் சாலினி ஆகியோருக்கும், அரசு தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற பனிமொழி அவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது புலவர் ச.ந.இளங்குமரன் பாராட்டுரையோடு நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். நிறைவாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1330 திருக்குறள் சொன்ன பைந்தமிழ் ரோசினி அவர்களுக்கு உரூ 1000 பரிசாக வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. திருக்குறள் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், பிறபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் திருவள்ளுவர் மன்றம் மற்றும் சிவசங்கரனார் நினைவாக பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. நிறைவாக ப.முத்துக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment