கார் நாற்பது (மூலமும் உரையும்)
8) மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் கண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு.
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என பெண்ணுக்கே உரிய இயல்பான குணங்கள் நன்கு அமையப் பெற்ற நல்லாய், மண்ணாலான இந்த உலகத்தில், நிலையான புகழை விரும்பிப் பிரிந்து சென்ற நமது தலைவர், மீண்டு வருவதைக் கண்ணிற்கு இயற்றப் பட்ட மையைப் (கண்மை) பூசியிருப்பது போல் காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் கூறுகின்றன.
9) கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து.
கருவிளம் பூக்கள் கண்மலர் போலப் பூத்தன. கார்ப்பருவத்திற்குரிய தீயினது நிறமுடைய சிவந்த தோன்றிப் பூக்கள் பூத்து வனத்தை அழகு செய்தன. இவை எதனைச் சொல்கிறதென்றால், வரியை உடைய வளையல்கள் முன்னங் கைகளிலிருந்து கழல மனத்திற்கு இதமான இனிய சொற்கள் பலவும் சொல்லி, நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வருவதைச் சொல்கின்றன.
உரை :
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment