*தமிழ் ஆட்சிமொழி வாரம்*.
*தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை தேனி மாவட்டம், வையைத் தமிழ்சங்கம் தேனி, சங்கத்தமிழ் அறக்கட்டளை தேனி, பசுமை இயக்கம் உத்தமபாளையம்* உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழ் ஆட்சிமொழி வார நிகழ்வை கொண்டாடின. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் *பெ.இளங்கோ* அவர்கள் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஆணையின்படி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்கக் கோரியும், தேனி மாவட்டம் தேனி நகர்ப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வணிக நிறுவனங்களுக்கும் சென்று, நிறுவனங்களின் மேலாளர்கள், மற்றும் உரிமையாளர்களை நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சித் துறையின் சுற்றறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசாணை நகலையும் கொடுத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழில் மாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு ஆரசின் *தமிழ்ச்செம்மல்* விருதுபெற்ற அண்ணன் *இராஜதாசன்* அவர்களுக்கு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் வாழ்த்தும், நிகழ்வில் திரளாகக் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வின் நிறைவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்ற *அம்மா மினி கிளினிக்* என்பதற்கு *அம்மா மருத்துவக் குடில்* என அழகுத் தமிழில் பெயர்சூட்டலாம் என புலவர் *இளங்குமரன்* முன்மொழிய அனைத்துத் தமிழமைப்புகளைச் சார்ந்தவர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் செய்யப்பட்டது.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.
நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment