தேனி மாவட்டத்தில் முதன்முறையாக திருக்குறள் முற்றோதல் உலகச்சாதனை நிகழ்ச்சி போடிநாயக்கனூர் சவுண்டீசுவரி நடுநிலைப் பள்ளியில் தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்புரை வழங்க, போடி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன் திருக்குறளார் முத்துக்காமாட்சி, மகாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க அகில இந்திய சாதனைப் பதிவு நிறுவனத்தின் தலைவர் வெங்கடேசன் அவர்களும், ஆசியன் சாதனைப் பதிவு நிறுவனத்தின் தலைவர் விவேக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினைக் கண்காணித்துச் சிறப்புரை வழங்கி உலகச் சாதனைப் பட்டயத்தை வழங்கினர். பள்ளிச் செயலர் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூலாடை அணிவித்துச் சிறப்பித்தார். 150 மாணவர்கள் 1330 குறட்பாக்களை 107 நிமிடங்களில் முற்றோதல் செய்து உலகச் சாதனை படைத்த இந்நிகழ்வினை பள்ளியின் தமிழாசிரியர் அ.இலட்சுமி குமரேசன் நெறிப்படுத்தினார். பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், நிர்வாகக் குழுவினரும், பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment