இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 9 March 2024

தேனிமாவட்ட ஆட்சியருக்கு நன்றி தேனி மு.சுப்பிரமணி

தேனி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி... நன்றி... நன்றி...!!!

தமிழ்நாடு அரசு, மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சியை மாவட்ட நிருவாகத்தின் கீழ் நடத்தி வருகிறது. இப்புத்தகக் கண்காட்சிக்கான சிறப்புப் பேச்சாளர்கள், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பெற்று வருகிறார்கள். இக்கண்காட்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்பாளர்களும் மாவட்ட நிருவாகத்தால் சிறப்பு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறப்பு செய்யப்படுபவர்களிலிருந்து இருவர் உரையாற்ற வாய்ப்புகள் வழங்கப்பெற வேண்டும் என்று தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நானும் (தேனி மு. சுப்பிரமணி), வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் புலவர் ச. ந. இளங்குமரனும் கோரிக்கை வைத்திருந்தோம். 

எங்களது கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில்,  தேனி மாவட்ட இரண்டாவது புத்தகக் கண்காட்சியில் ‘இலக்கிய அரங்கம்’ எனும் புதிய நிகழ்வு சேர்க்கப்பட்டது. இதன் மூலம்,  ஆறு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் தேனி மாவட்டப் படைப்பாளர்கள் சுமார் 60 படைப்பாளர்கள் சிறப்பிக்கப் பெற்றதுடன், ஒவ்வொரு நாளும் இருவர் வீதம் 12 படைப்பாளர்கள் உரையாற்றிட வாய்ப்பும் வழங்கப்பெற்றது.   

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாகப் புத்தகக் கண்காட்சியில், மாவட்டப் படைப்பாளர்களுக்கு மதிப்பு செய்திடும் நோக்கத்தில் வைக்கப்பெற்ற எங்களது கோரிக்கையை ஏற்று, அதனைச் செயல்படுத்திய தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர்.வி. ஷஜீவனா இ. ஆ. ப அவர்களுக்கும், இந்நிகழ்வினை முன்னின்று நடத்திய மாவட்ட நூலக அலுவலர் இரா. சரவணக்குமார் உள்ளிட்ட நூலகர்கள் அனைவருக்கும், தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. இளங்கோ உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி... 

(இனி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பெறும் புத்தகக் கண்காட்சிகளிலும், குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டப் படைப்பாளர்களும் சிறப்பிக்கப்படலாம் என்று நம்புவோம்...)

செய்தி 
தேனி மு.சுப்பிரமணி

No comments:

Post a Comment