தேனி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி பெரியகுளம் ராமானுஜர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார். பெரியகுளம் நகர வணிகர் சங்கத் தலைவர் முன்னிலை வகித்தார். மேனாள் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் பெ.சந்திரா, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் வைப்பதற்கான சட்டம் குறித்தும், வைக்கவேண்டிய தேவை குறித்தும், அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்களும் தமிழில்தான் இருக்கவேண்டும் வலியுறுத்தியும் பேசினர்.
No comments:
Post a Comment