இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 24 February 2024

திருக்குறள் உலகச்சாதனை

தேனி மாவட்டத்தில் முதன்முறையாக திருக்குறள் முற்றோதல் உலகச்சாதனை நிகழ்ச்சி போடிநாயக்கனூர் சவுண்டீசுவரி நடுநிலைப் பள்ளியில் தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்புரை வழங்க,  போடி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன் திருக்குறளார் முத்துக்காமாட்சி, மகாலிங்கம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்க  அகில இந்திய சாதனைப் பதிவு நிறுவனத்தின் தலைவர் வெங்கடேசன் அவர்களும், ஆசியன் சாதனைப் பதிவு நிறுவனத்தின் தலைவர் விவேக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினைக் கண்காணித்துச் சிறப்புரை வழங்கி உலகச் சாதனைப் பட்டயத்தை வழங்கினர். பள்ளிச் செயலர் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூலாடை அணிவித்துச் சிறப்பித்தார். 150 மாணவர்கள் 1330 குறட்பாக்களை 107 நிமிடங்களில் முற்றோதல் செய்து உலகச் சாதனை படைத்த இந்நிகழ்வினை பள்ளியின் தமிழாசிரியர் அ.இலட்சுமி குமரேசன் நெறிப்படுத்தினார். பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், நிர்வாகக் குழுவினரும், பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday, 10 February 2024

பாவாணர் வழியில் பைந்தமிழ் வளர்த்த இளங்குமரனார்

08-02-2024
பாவாணர் பிறந்தநாள் விழாப்பேருரை.
இடம்: மகாத்மாகாந்தி கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் தமிழ் இலக்கியத்துறை ,  சோலைசேரி - தென்காசிமாவட்டம். 
'பாவாணர் வழியில் பைந்தமிழ் வளர்த்த இளங்குமரனார்" எனும் தலைப்பில் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி சார்பில் கலந்துகொண்டு உரைவழங்கிய இனியபொழுது... நிகழ்ச்சி ஏற்பாடு : உலகத் தமிழர்கழகம் முறம்பு.

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம் - வையைப் பதிப்பகம் தேனி நாகலாபுரம்.

Sunday, 4 February 2024

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்

04-02-2024

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா.
உலகத் தமிழ்நெறிக் கழகம் - திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து நடத்தும்  திருக்குறள் முத்தமிழ் பரிசளிப்பு விழா கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழ்நெறிக் கழகச் செயலாளர் சிவலிங்கம் அவர்கள் வர்வேற்க, முனைவர் நாகரத்தினம் தலைமையில் "திருக்குறளும், செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும்" எனும் தலைப்பில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் புலவர்ச.ந.இளங்குமரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். 

நிகழ்வின் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே இயல் இசை நாடகம் தொடர்பாக முத்தமிழ்ப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. சுமர் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும்,  ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களது திருவுருவப்படத்தையும், திருவள்ளுவர் படிமத்தையும் மாணவ மாணவிகள் திறந்து வைத்து மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி திருக்குறள் முனைவர் அன்வர் பாட்சா, கவிஞர் வள்ளியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணிக்கவாசகம் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் அறிக்கையைப் படிக்க இருகூர் ஆறுமுகம், சக்திமதி ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்.

திருக்குறள் ஆய்வாளர் கணேசன் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நன்றியுரை வழங்கினார்.

கோவை தமிழ்ச் சங்கத்திலிருந்து மானூர் புகழேந்தி ஐயா அவர்கள், சோதிமைய அறக்கட்டளையின் சார்பில் முனைவர் இராதாகிருட்டிணன்,  உலகத் தமிழ்க்கூடல் சார்பில் மகாலிங்கம்  ஆகியோர் சிறப்பு விருந்திருந்தினருக்கு நூலாடை அணிவித்துச் சிறப்பித்தனர்.