இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 14 June 2021

சங்ககாலத் தமிழர் வாழ்க்கை. ச.ந.இளங்குமரன்

பண்டைத் தமிழரின் நிலவியல் வாழ்க்கை..

(3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை

நாட்டுவாழ்க்கைநிலை: இக்காலத்திற்போலச் நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுட்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டுமென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது புலனெறிவழக்கம் எனப்படும். அதாவது, உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும். இனியதும் இன்னாததுங் கலந்து உள்ளதாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும். சரித்திர

குறிஞ்சி நாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும் பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவ தன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்ஙனமே பிறவும்.

பண்டைத்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்.) இவற்றின் பெயர் களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள்: ஏனைய பூப்பெயர்கள்.

பாலை எனபது பிறநாட்டிலுள்ளதுபோன்ற வறண்ட மணல் நிலமன்று. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது. அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.

வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

றானலந் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்'' என்று காண்க. இளங்கோவடிகள் (சிலப். 11: 12-16) கூறுதல் பாலையின் முதுவேனிற்கால நிலையே, பிரிவிற்குரிய 'தாக அகப்பொருட் செய்யுட்களிற் கூறப்படும்.

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்துபோவது, குறிஞ்சி யினின்று போவதும். அயல்நாட்டினின்று வந்து குடிபுகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள். முன்னது மக்கட்பெருக் கால் படிப்படியாய் நிகழ்வது; பின்னது தெரிந்துகோடலால் ஒரே சமையத்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ்நாட்டில் நிகழ்ந்ததென்க.

குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும். தமிழ் நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றியபின் பாதலின். குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த கொன்னிலை அப்போது மறைந்துபோயிற்று. அதனாற் குறிக்கப்பட வில்லை. ஆயினும் கொள்ளலாம். அதைக் கருத்தளவையான் அறிந்து

மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த்தானிருந் திருக்க வேண்டும்; அவரையே ஆதம் ஏவையென்று கிறித்து மதமும் இஸ்லாம் மதமுங் கூறுகின்றன.

இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய

பின், குறிஞ்சியில் இடம் போதாமல், சிலர் முல்லைக்குச்

சென்றனர்.

முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டை யாடியும் உண்டுவந்த மக்கள். இயற்கையாய் விளையும் மர வுணவு போதாமையாலும். வேண்டியபோதெல்லாம் ஊனுணவு கிடையாமையாலும், செயற்கையாய்ப் பயிர் பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத்தொடங்கினர். இதற்கு மரமடர்ந்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குசுட்கும் ஓரளவு தப்பினர்.

மாந்தன் முதன்முதலாய் வளர்த்த விலங்கு ஆவே. ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம் மாவெனப்பட்டது. மா என்று கத்துவது மா- மான் - மாடு. மா என்பது னகர மெய்யீறுபெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா (ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப்பெயராயிற்று. என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று.

(மொழிஞாயிறு தேவநேயப்  பாவாணர் பதிவிலிருந்து...
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்)

No comments:

Post a Comment