தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கான கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் திரு
பெ. இளங்கோ அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் பாப்பா லட்சுமி அவர்கள் நிகழ்வை தொகுத்தார். இந்நிகழ்வில் தேனி மாவட்டம் முழுமைக்குமாக 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டுரைப்போட்டியில் 52 பேரும் கவிதையில் 50 பேரும் பேச்சு போட்டியில் ஐம்பது பேர் என 154 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அடியவன் நடுவராகக் கலந்து கொண்டதோடு பேச்சு கவிதை கட்டுரை தொடர்பாக ஒவ்வொரு மாணவரும் போட்டியினை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கான ஊக்க உரையாற்றினேன். நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி தலைமையாசிரியர் நன்றி உரையாற்றினார். நந்தகோபால் , கற்பூர பூபதி , திராவிடமணி, செந்தில்குமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..
Saturday, 1 September 2018
தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை போட்டிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment