தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஒக்கரைப்பட்டி #அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற #தமிழ்க்கூடல் விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் (புலவர் ச.ந.இளங்குமரன்) கலந்து கொண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு உரை வழங்ககினேன். விழாவில் மாணவ மாணவிகள் 17 பேர் பேச்சு, கட்டுரை, ஓவியம் எனப் பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த வர்சிதா, மனிசா, பிரணிதா ஆகிய மூன்று மாணவிகள் விழா மேடையில் பேசினர். மொழி ஆளுமையும், எழுத்து உச்சரிப்பும், உடல் மொழியும், தமிழ் மொழியின் செறிவும் நிறைந்து கிடந்தன. அந்தக் குழந்தைச் செல்வங்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் என்னுடைய நிறை வாழ்த்து. மேலும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகளும், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி திருக்குறள் நூல்களையும் வழங்கி வாழ்த்தினேன். பின்பு ஒரு மாணவி அருகில் வந்து என்னுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு என்னோடு ஒளிப்படம் எடுக்க விரும்பினார். எடுத்துக்கொண்டோம். நான் மேற்கொண்டு ஏதாவது படிக்கின்ற பொழுது எனக்கான உதவிகள் செய்ய முடியுமா? என்று கேட்டார். படிப்புத் தொடர்பாக என்னால் இயன்ற உதவியினைக் கட்டாயம் செய்வேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முதுகலைத் தமிழாசிரியர் சுசீலா அம்மா அவர்களுக்கும், இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி.
No comments:
Post a Comment