தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கான திருக்குறள் திறன் போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களிலிருந்து 88 மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற இப் போட்டியில் நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார் அவர்கள் வாழ்த்துரையோடு போட்டியினை மதிப்பீடு செய்தார். தமிழ்ச்செம்மல் ப.முத்துமணி அவர்கள் வாழ்த்துரை வழங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஊக்க உரை வழங்கினார்.
போட்டிக்களத்தை வையைத் தமிழ் சங்கத்தின் மாணவர் கள ஒருங்கிணைப்பாளர் இலட்சிய ஆசிரியர் அ.இலட்சுமி குமரேசன் அவர்களும், கவிஞர் க.இரா.திருவருள் செல்வி அவர்களும் நெறியாள்கை செயதனர். நான்கு சுற்றுகளாக நடைபெற்ற நிகழ்வின் நிறைவில் வையை பா.செல்வகுமாரன் நன்றியுரை வழங்கினார்.
முதல் இடம்
1- ரேஷ்மா
2- அர்சின் சனா
3- ஆதியவர்மன்
4- ஜாஸ்லின் டாரத்தி
5- மஹாபரணி
6- பத்மஸ்ரீ
7- தரணி
8- பவிஷா
9- ரித்திஸ்ரீ
இரண்டாம் இடம்
1- ஜெ.ஜஸ்வந்த்குமார்
2- தரணிவேந்தன்
3- கவின்ராஜ்
4- நவ்யஸ்ரீ
மூன்றாம் இடம்
1- சாந்தினி
2- சுப்புலட்சுமி
3- ம.சனுஜாஸ்ரீ
4- ர.பிரதீபா
ஆகிய மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
முதல் சுற்றில் கலந்துகொண்டு மதிப்பெண் பெற்றவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவியர் ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்தினையும் உரித்தாக்குகின்றோம்.
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்
No comments:
Post a Comment