அகில இந்திய உலக சாதனைப் பதிவு இணையப் பல்கலைக்கழகம், மற்றும் செ.வெ. ரெக்கார்டு ஹோல்டர் போரம் இணைந்து தேனி வையைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் புலவர் இளங்குமரன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கிறது. இது குறித்து ஆல் இந்திய புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத் தலைவர் செ.வெங்கடேசன் அவர்கள் கூறியதாவது.
புலவர் ச.ந. இளங்குமரன் அவர்கள் தேனியில் வையைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி உலகளாவிய நிலையில் திருக்குறளில் பணியையும், தொல்காப்பியம் பணியையும் சிறப்புறச் செய்து வருகிறார்.
உலகின் முதன் முதலாக நடைபெற்ற தொல்காப்பியம் முற்றோதல் உலக சாதனை நிகழ்வின் வழிகாட்டியாகவும், தொல்காப்பியம் பல் சுவை உலக சாதனை நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்களுல் ஒருவராகவும் செயல்பட்டு உலகெங்கும் தொல்காப்பியத்தை இளைய தலைமுறையினருக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்த்து வருகிறார். மேலும் பன்னாட்டுத் திருக்குறள் திறன் போட்டிகளை நடத்தி பள்ளி மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தி வருவதோடு, திருக்குறளை முதன்மைப்படுத்தி 250 க்கும் மேற்பட்ட திருக்குறள் வழியில் திருமணங்களைச் செய்து வைத்திருக்கிறார்.
இவர் தனக்கென ஒரு தனியான வழியை ஏற்படுத்திக்கிண்டு, தனித்தமிழ் அறிஞர்கள் வழியில் நின்று கல்விப் பணியும் சமூகப் பணியும் செய்து வருவதோடு, தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி தொடர்பாக மக்களிடமும், மாணவ மாணவியரிடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார். அன்னாரின் தன்னலமற்ற சேவையைக் கடந்த ஓராண்டு காலமாகக் கண்காணித்து ஆய்வு செய்து அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment