தொல்காப்பியம் சமற்கிருத ஐந்திர நூல் வழியது என்று கதைப்பதற்கு வாய்த்த , தொல்காப்பியப் பனம்பாரர் பாயிர அடிஒன்று.
அது.
"ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்"
என்பது. ஐந்திரம் பொருளாமா?
நிறைந்த
ஐந்திரம் 'ஓதிய இல்லை
ஐந்திரம் 'கற்ற' இல்லை
ஐந்திரம் 'பயின்ற இல்லை
ஐந்திரம் 'படித்த' இல்லை
ஐந்திரம் 'கேட்ட' இல்லை
ஐந்திரம் உணர்ந்த இல்லை
ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன், எத்தகையன்?
ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே"
என்று தொடர்வதன் பொருள் என்ன?
"பொறிவாயில் ஐந்தவித்த பொய்தீர் ஒழுக்கத்தவன்." (6)
"சுவையொளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை அறிவான்" (27)
"ஐந்தவித்தான் ஆற்றல்" (25)
என்னும் பொய்யாமொழி
“வாளால் போழினும் தாளில் வீழினும் ஒருபடித்தாக இருக்கும் நிலை உள்ளது. உள்ள படி எடுத்தல், படியெடுத்தல். அல்லவா!
"உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு " (26)
என்னும் தவத்தன்; ஐந்திரம் நூல் எனின், அது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் தழுவியதா! விண்ணவர் கோமான் விழுநூல் என்பர் (சிலப்பதிகாரம் 11:99)' அதுவும் கற்றுப் பெறுவதன்றாம். தீர்த்தநீராடிப் பெறுவதாம் புனைவு.
(செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களின் தொல்காப்பிய ஆய்விலிருந்து ... ச.ந.இளங்குமரன். வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.)
No comments:
Post a Comment