இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 25 February 2019

ஐம்பெரும் விழா வையைத் தமிழ்ச்சங்கம் & சங்கத்தமிழ் அறக்கட்டளை

வையைத் தமிழ்ச்சங்கம் & சங்கத் தமிழ் அறக்கட்டளை

 நடத்திய 

ஐம்பெரும் விழா.

காலை 10 மணிக்குத் தொடங்கிய தமிழ்நாடு 50 பொன்விழாக் கவியரங்கத்திற்கு பசுமைத்தேனி சிவக்குமார் தலைமையேற்க, ம.சுந்தரமூர்த்தி வரவேற்புரையாற்ற, ரெ.கந்தசாமி,பெ.அந்தோணிராஜ்
முன்னிலையில் பேரா.மு.செந்தில்குமார், பேரா.செ.இரவிசங்கர் நிகழ்ச்சியை நெறிப்படுத்த தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து கவிஞர்கள்
கவிதைபாடிச் சிறப்பித்தனர்..இரண்டாம் அமர்வு "மொழிஞாயிறு பாவாணர் பிறந்தநாள் விழா" நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்  மதுரைக் கவிஞர் கவிமுத்து அவர்களின் பலகுரல் நிகழ்வுகளோடு கவிஞர் இளங்கோ, மருத்துவர் அந்தோணி பிரான்சிஸ் ஆகியோரது பாடல்களோடும் தொடங்கியது.  இந்த நிகழ்வுக்கு மா. தங்கப்பாண்டியன் தலைமையேற்றார். வழக்குரைஞர் எம் கே எம் முத்துராமலிங்கம் அவர்களும் ஆப்பிள் முருகன் அவர்களும் முன்னிலைவகித்தனர். பாவாணர் குறித்து  வழக்குரைஞர் இரா.தமிழானந்தம் அவர்களும் ஆ.செ.முருகேசன் அவர்களும் சிறப்புரையாற்றினர். மூன்றாம் அமர்வு வையைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாவலர்த.கருணைச்சாமி அவர்கள் தலைமையில்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,
(உமாநாராயணன் பதிப்பகம்) கோ.விசாகன் (தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை)ஆகியோர் முன்னிலையில் "வையைத் தமிழ்ச்சங்கம் 14 ஆண்டுகள் ஒரு மீள்பார்வை" குறித்து தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் ச.ந.இளங்குமரன் சங்கத்தின் தோற்றம், அதன் செயல்பாடுகள், குறித்துப் பேசினார்.நான்காம் அமர்வு

நூல்கள் வெளியீடு 
வையைத் தமிழ்ச்சங்கத்தால் தொகுக்கப்பட்ட 
தமிழ்நாடு 50 பொன்விழாக் கவிதைகள் நூலினை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு பெ.இளங்கோ அவர்கள் வெளியிட, திண்ணை கோ.செந்தில்குமார் , மழைத்துளி சற்குரு, மு.அடைக்கலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புலவர் ச.ந.இளங்குமரன் எழுதிய கொலைவாளினை எடடா... எனும் கவிதை நூலினை தொழிலதிபர் ம.கருணாகரன் அவர்கள் வெளியிட  சங்கத்தமிழ் மகேந்திரன், மதிப்புறுமுனைவர் பால்ப்பாண்டி, மருத்துவர் அந்தோணிபிரான்சிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர்.
ஆகிய இரண்டுநூல்கள் வெளியிடப்பட்டன.
நான்காம் அமர்வு

நூல்கள் வெளியீடு 
வையைத் தமிழ்ச்சங்கத்தால் தொகுக்கப்பட்ட 
தமிழ்நாடு 50 பொன்விழாக் கவிதைகள் நூலினை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திரு பெ.இளங்கோ அவர்கள் வெளியிட, திண்ணை கோ.செந்தில்குமார் , மழைத்துளி சற்குரு, மு.அடைக்கலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

புலவர் ச.ந.இளங்குமரன் எழுதிய கொலைவாளினை எடடா... எனும் கவிதை நூலினை தொழிலதிபர் ம.கருணாகரன் அவர்கள் வெளியிட  சங்கத்தமிழ் மகேந்திரன், மதிப்புறுமுனைவர் பால்ப்பாண்டி, மருத்துவர் அந்தோணிபிரான்சிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டு சிறப்பித்தனர்.
ஆகிய இரண்டுநூல்கள் வெளியிடப்பட்டன.
       
       ஐந்தாம் அமர்வு விருதுகள் வழங்கும் விழா சரியாக சரியாக 4- 15 மணிக்கு தொடங்கியது தமிழ்நாடு கவிதை நூலுக்காக எழுதப்பட்ட கவிதைகளும் சிறந்த 10 கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு கவிஞர்களுக்கு கவிச்செம்மல்  விருது வழங்கப்பட்டது. கவிச் செம்மல் விருது பெற்றவர்கள் 

         கோவை கோகுலன், கவிமாமணி வெற்றிப் பேரொளி சென்னை, கவிஞர் அரிமர்த்தன பாண்டியன் ஒடுக்கத்தூர், கவிஞர் தடூர் தமிழ்க்கதிர் கிருஷ்ணகிரி, புலவர் இராம வேதநாயகம் வடமதிமங்கலம், கே.பி. பத்மநாபன் கோவை, கிளக்காடி வே. முனுசாமி சென்னை, கவிஞர் மணிவண்ணன் புதுக்கோட்டை முனைவர் வெற்றி திருநாவுக்கரசு திருநாகேஸ்வரம், முனைவர் செ.வில்சன்  தஞ்சை ஒரத்தநாடு.

       அதனைத் தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றி வரும் ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தமிழ்த் தொண்டர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது 
     
       விருது பெற்ற முனைவர் கடவூர் மணிமாறன் குளித்தலை, பேராசிரியர் மு.ஜெயமணி காரைக்குடி, முனைவர் மு செந்தில்குமார் கம்பம் மருத்துவர் பெ.போத்தி மதுரை முனைவர் செ. ரவிசங்கர் மதுரை, முனைவர் அருள் ஜோசப் ராஜ்.

         தேனி மாவட்டத்தில் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது 
சிறந்த பத்திரிக்கையாளர் விருது  ஊடகத்துறைப் பணிகளுக்காக இரா.முத்துநாகு அவர்களுக்கும், சிறந்த பட்டிமன்ற நடுவருக்கான விருது நா.வீ.வீ. இளங்கோ அவர்களுக்கும் இலக்கிய சேவைக்கான தமிழ்ச் சுடர் விருது ஆ. முத்துக்குமார் அவர்களுக்கும், தமிழ் மெய்யியல் ஆய்வுக்காக  பண்பாட்டு ஆய்வாளர் விருது முனைவர் சீ.வெ.வெ.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும், திருக்குறள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த இளம் சாதனையாளர் விருது அ.சாலினி, அ.சாமினி  ஆகியோருக்கும், தேசிய அளவிலான மேசைப்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கியமைக்காக சாதனையாளர் விருது வெற்றிவேந்தன் அவர்களுக்கும், தேசிய அளவிலான மேசைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்றமைக்காக இளம் சாதனையாளர் விருது செல்வி சி. தர்ஷனா அவர்களுக்கும் ஒளிப்பட சேவையை பாராட்டி சிறந்த ஒளிப்படக் கலைஞர் விருது தேனி பாண்டி அவர்களுக்கும், குருதிக்கொடை சேவைக்காக சேவை விருது நம்மால் முடியும் குழுவினருக்கும், அரசுப்பள்ளிகளை புனரமைப்பு செய்து வரும் சேவைக்காக சேவை விருது பட்டாம்பூச்சி குழுவினருக்கும், சிறந்த உலக்கிய ஊக்குநர் விருது ஜெயதுரை அவர்களுக்கும் வையைத் தமிழ்ச்சங்கம் &சங்கத் தமிழ் அறக்கட்டளையின் சார்பில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 
      
        இந்த விருதுகளை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பெ. இளங்கோ அவர்களும், தொழிலதிபர் கருணாகரன் அவர்களும் இணைந்து வழங்கினர்.
இரா.மணிகண்டன் அவர்கள் நன்றியுரையாற்றினார். விழாவினை கவிமுரசு சி ஜெயபாண்டி தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment