இலக்கணம் என்ற சொல்லுக்கு மொழியின் இயல்பு என்று பொருளாகும்.இலக்கணம், இலக்கியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிற்பட்டதாயினும் ஒரு மொழியை பிழையின்றி எழுதவும், பேசவும் இன்றியமையாதது இலக்கணமாகும். உலக முதன் மொழியாம் நம் தமிழின் இயல்புகளையும்,மரபுகளையும் முறையாக உணர்ந்தால்தான் மொழியை செம்மையாகக் கையாள முடியும்.இலக்கு-குறிக்கோள்; அணம்=காப்பு எனவும் கூறலாம். மொழியின் அழகைப் பேணிக்காப்பது இலக்கணம் என்றால் அது மிகையில்லை.
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் என்பர். அவை முறையே
1) எழுத்து 2) சொல் 3) பொருள் 4) யாப்பு 5) அணி
எழுத்து இலக்கணம்
------------------------------
அ) ஒரு மொழிக்கு முதல் காரணமாகவும் காதால் கேட்கும் நுட்பத்தின் காரியமாகவும் தோன்றும் ஒலி எழுதப்பட்டு எழுத்து என்று பொருள் படுகிறது. பேசுவதை ஒலிவடிவ எழுத்து என்றும், எழுதுவதை வரிவடிவ எழுத்து என்றும் கூறுவர்.
== எழுத்து முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகைப்படும்.
=== முதலெழுத்து .== உயிரெழுத்துகள் பனிரெண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் (12+18=30) மொத்தம் முப்பது எழுத்துகள் முதலெழுத்து எனப்படும். காரணம் இவையே உயர்மெய் எழுத்துகள் தோன்றக் காரணமாகின்றன.
== உயிரெழுத்து அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ, (பனிரெண்டு)
== மெய்யெழுத்து க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த், ந், ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ள்,ழ்,ற்,ன்,(பதினெட்டு)
== உயிரெழுத்து குறில் , நெடில் , என இரண்டு வகைப்படும்.
(குறில்) அ,இ,உ,எ,ஒ, என ஐந்து எழுத்துகளாகும்.
(நெடில்) ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஐ,ஔ, என ஏழு எழுத்துகளாகும்.
மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம், என மூன்று வகைப்படும்.
== க,ச,ட,த,ப,ற வல்லினம்.
== ங,ஞ,ண,ந,ம,ன, மெல்லினம்
== ய,ர,ல,வ,ழ,ள இடையினம்.
( தொடரும்)

No comments:
Post a Comment