#தேனி #வையைத் தமிழ்ச் சங்கம் - வையைப் #பதிப்பகம் சார்பில் "கவிதையைக் காதல் செய்" நூல் வெளியீட்டு விழாவும் தேனி மாவட்ட இலக்கிய அமைப்புகளின் சார்பில் #ஈரோடு மாவட்ட #ஆட்சியர் திரு #ச.#கந்தசாமி ஐயா அவர்களுக்குப் பாராட்டு #விழாவும் புலவர் ச.ந. இளங்குமரன் தலமை ஒருங்கிணைப்பில் ஈரோட்டில் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி ஐயா அவர்கள் நூலை வெளியிட ஈரோடு மாவட்டத் #தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் #பெ.#இளங்கோ அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டு நூல் குறித்து மதிப்புரை வழங்கினார் நூல் ஆசிரியர் #விருமாண்டி #கன்னீசுவரி அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து "காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்" எனும் வள்ளுவப் பெருந்தையின் வாய்மொழிக்கு ஒப்ப விளங்கும் எளிமையும், அன்பும், தமிழின்பால் ஈடுபாடும் கொண்டு விளங்கும் #மரபுக் #கவிஞரும், எழுத்தாளருமான ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.#கந்தசாமி ஐயா அவர்களுக்குப் பாராட்டு விழா தேனி மாவட்ட #இலக்கிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்றது. கவிஞர் பா.#கவிதா கிராம நிர்வாக அலுவலர், முதுநிலை தமிழாசிரியர் ஆ.#முத்துக்குமார், தொல்லியல் ஆய்வாளர் மூ.#செல்வம், கவிஞர் செ.#திராவிடமணி, திருக்குறள் #கற்பூரபூபதி, பா.#செல்வகுமரன், பழ.#வேல்முருகன், குறளரசி #அர்சின் சனா, #மகேசுவரி தட்டச்சர் உள்ளிட்ட பலரும் ஆட்சியருக்கு நூலாடை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் பாராட்டிச் சிறப்பித்தனர். "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து" எனும் குறளின் பொருளாய் விளங்கிய ஆட்சியர் அவர்கள் அனைவரையும் தம் குடும்ப உறவினராக்கி உரையாடிய பாங்கு எல்லோரையும் வியக்க வைத்தது. இதை நாங்கள் தேனியில் ஐயாவோடு பயணித்த நாட்களிலேயே உணர்ந்திருந்தாலும் ஈரோட்டு நிகழ்வு நெகிழ்வாகவும் அமைந்தது.
நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம், வாசிக்கலாம் வாங்க தேனி, சின்னமனூர் செந்தமிழ் இலக்கிய மன்றம், உத்தமபாளையம் நூலக வாசகர் வட்டம், கூடலூர் தேடல் இலக்கிய மன்றம் உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்.
இனிய அன்புடன்
-ச.ந.#இளங்குமரன்
No comments:
Post a Comment