வளரி கவிதை இதழ், வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு, கடற்கரை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பாவேந்தர் நினைவேந்தல் நூல் திறனாய்வு உரையரங்க விழா மிகச் சிறப்பாக நாகர்கோயில் தூயர் இல்ல (பிசப் கவுசு) அரங்கில் நடைபெற்றது. வளரி இதழின் ஆசிரியர் பாவலர் அருணா சுந்தர்ரராசன் ஐயா அவர்களது முன்னெடுப்பில், பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் மாநிலச் செயலாளர் சகாய சுசி அவர்களது நெறியாள்கையில் கடற்கரை இலக்கிய வட்டத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பாவேந்தரின் பன்முகம் என்னும் தலைப்பில் உரையாற்றுவதற்கான சூழலை எமது இளவல் அதிவீரபாண்டியன் அவர்கள் பெற்றுக் கொடுத்தார்.
பாவேந்தரின் பன்முகம்...
மொழியின் வழியாக ஒருங்கிணைந்த இந்திய தேசியத்தை கட்டமைக்க முயன்றவர் பாரதி...
தமிழ் மொழியையே தேசியமாகக் தமிழியத்தைக் கட்டமைத்தவர், தமிழ்த்தேசியத்தின் வித்து பாவேந்தர் பாரதிதாசன்...
எனது உரையின் தொடக்கம்....
நல்லதொரு விழா. குறிப்பாக ஒன்பது நூல்களைத் திறனாய்வு செய்த திறனாய்வாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கோணத்திலும் மிகச் சிறப்பாக நூல்களைத் திறனாய்வு செய்தனர். பேச்சாளர்களே திறனாய்வாளர்களாக இருந்தார்கள். திறனாய்வாளர்கள் நூலாசிரியர்களாகவும், பேச்சாளர்களாகவும் இருந்தது மகிழ்வையும், நெகிழ்வையும் தந்தது. குறிப்பாக இந்த அவை எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் படைப்பாளர்கள் கலந்து கொண்ட அவையாக மிளிர்ந்தது. நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை பேர்களுக்கும் பேரன்பும், வாழ்த்தும்.
இனிய அன்புடன்
முனைவர் புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
கத்தும் கடலோசை தேடி வளரி கவிதை இதழ் மற்றும் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பிற்கு ஆதரவாக கன்னியாகுமரிக்கு வந்து பாவேந்தரின் புகழையும் பெருமையையும் சான்றோர் அவையில் உரக்கச் சொன்ன புலவருக்கு வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு சார்பாக நன்றியும் வாழ்த்தும்
ReplyDelete