தேனி வையை தமிழ்ச்சங்கம் - நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கூடல் 677 ஆம் நிகழ்வு கல்லூரி மாணவ மாணவியருக்கான "நல்ல தமிழ் பேசு" என்னும் போட்டியாக நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.
ஆங்கிலமோ, பிறமொழிச் சொல்லோ கலவாமல் மூன்று நிமிடம் நல்ல தமிழில் பேசவேண்டும். கூறியது கூறல், திணறல் இருக்கக் கூடாது . தலைப்பு கொடுக்கப்பட்ட 7 வினாடிகளுக்குள் பேச்சைத் தொடங்கவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இவ்விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவ மாணவிகள் பலரும் மிக அருமையாகப் பேசினர்.
நிகழ்வுக்கு வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும், உலகத் தமிழ்க்கூடலின் அமைப்பாளருமான புலவர் இளங்குமரன் தலைமை ஏற்றார். போட்டி நடுவர்களாக இணை அமைப்பாளர் தமிழ்ச்செம்மல் முத்துமணி, நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரன் ஆகியோரும், மதிப்பீட்டாளர்களாக தமிழ்ச்சுடர் முத்துக்குமார், தொல்லியல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.
முன்னதாக சென்னை அலைகடல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்களும், தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் முனைவர் தமிழ் மணிகண்டன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன் அவர்கள் நல்ல தமிழ் பேசு போட்டியை மிகச் சிறப்பாக நடத்தினார்.
இப்போட்டியில்
மோனிஷ் முதலிடம் கிருட்டிணன் கல்லூரி
கோவை, யோகேஷ்குமார் இரண்டாமிடம் கே.பி.ஆர் கல்லூரி கோவை, த.சுகன்யா மூன்றாம் இடம், கரியாபட்டினம், சின்ன செல்வம் நான்காம் இடம், சென்னை பல்கலைக்கழகம், ஸ்ரீமுகி ஐந்தாம் இடம் கிருட்டிணா கல்லூரி கோவை, செ.நுசரத் பாத்திமா, ஆறாம் இடம், ஔவையார் அரசு மகளிர் கல்லூரி. காரைக்கால், ச.பரத் ஏழாமிடம் சென்னை மாநிலக் கல்லூரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்குப் பரிசுத்தொகையாக 1000, 800, 700, 600, 600, 500, 500 ரூபாயை, நற்றமிழ் புலவர் ராசேந்தினரனார், முனைவர் பத்மினி பாலா, மகாலிங்கம் துரைராஜ், கவிஞர் செல்வி செல்வராணி, இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன், தொல்லியல் ஆய்வாளர் செல்வம், தமிழ்ச்சுடர் முத்துக்குமார், தொல்காப்பிய அறிஞர் இருளப்பன் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment