கடலூர் வெள்ள நிவாரணப் பணி....
மனிதநேயக் காப்பகம் தேனி ஒருங்கிணைப்பில், வையைத் தமிழ்ச் சங்கம்
நாகலாபுரம்-தேனி, பிரஸ் மீடியா கிளப், விஜய் மக்கள் இயக்கம், அஜீத் ரசிகர்கள்,
முன்னாள் ரானுவத்தினர், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இனைந்து பெருமழையால்
பதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்கள் சேகரித்தனர்.
தேனி மாவட்டத்தில்
தொண்டுள்ளம் கொண்டவர்கள் கருணாகரன் ஆயில்மில், மோனார்க் இன்டஸ்ட்ரியல் (பி)
லிமிடெட், பலசங்கா பருப்பு மில், ஏ.எம்.ஆர்.பருப்புமில், கனரா வங்கிப்
பணியாளர்கள், லெட்சிமிபுரம் இளைஞர் சங்கத்தினர், அன்னஞ்சி நண்பர்கள்,
ராசிங்காபுரம் பொதுமக்கள் ஆகியோர் பெருங்கொடையென நிவாரணப் பொருட்களை வழங்கி
உதவினர்.
அதோடு தேனி மாவட்டப்
பொதுக்மக்களும் தங்களால் இயன்ற அளவில் நன்கொடைப் பொருட்கள் ஈந்து சிறப்பித்தனர். தேனி
மாவட்ட ஆட்சியர் திரு வெங்கடாசலம் அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப 07-12-15 ஆம் நாள் இரவு சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை 3
லாரிகளிலும், 1 வேனிலும் ஏற்றிக்கொண்டு எமது அமைப்பு சார்ந்த நண்பர்கள் நேரடியாக
கடலூர் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில்
பெருமழையால் பாதிப்படைந்த கோதண்டராமபுரம், பூச்சிமேடு, மேட்டுப்பாளையம்,
தியாகவள்ளி, ஆண்டிக்குப்பம், கொத்தவாச் சேரி, பூவாலிக்குப்பம், தானுறு, கரப்பாடி,
புதுக்குப்பம், பூவாழை,தண்டுக்காரன் மேடு, உப்பங்கழி, காரைமேடு உளிட்ட 21 கிராமங்களுக்குச் சென்று நிவராணப் பொருட்களை நேரடியாக வழங்கினர்.
மக்கள் துயர் துடைக்கும்
மனிதநேயப் பணியை முன்னெடுத்த தேனி மனிதநேயக் காப்பகம் உள்ளிட்ட அனைத்து தோழமை
அமைப்புகளுக்கும், நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிறுவனத்தினருக்கும்,
பொதுமக்களுக்கும், தேனி நாகலாபுரம் வையைத் தமிழ்ச் சங்கம் தனது நெஞ்சம் நிறைந்த
நன்றிகளை காணிக்கையாக்கி மகிழ்கிறது.
No comments:
Post a Comment