திரு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள், தேனிமாவட்டம் நாகலாபுரத்தில் வையைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி தேனியில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார். இவர் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளர். சிறந்த திறனாய்வாளர், மரபுக் கவிதை,சிறுகதை, கட்டுரைகள்,இலக்கிய சொற்பொழிவு உள்ளிட்ட பல தமிழிலக்கியத் தளங்களில் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருபவர்.
மாவட்டம் மட்டுமல்லாது மாநில அளவில் தமிழ், தமிழ்மொழி சார்ந்த சமூகப்பணி செய்பவர்களில் இவரும் பரவலாகப் பேசப்படுபவர்.
தமிழ்மொழி,தமிழ்சமூகம்,தமிழ் இலக்கியம் சார்ந்த நடுவங்களில் குறிப்பிட்டுக் காட்டும்படியாக
1) பல ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவியருக்கு தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி வருவது
2) குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி வருவதோடு, தங்களின் பெயருக்கு முன் தலைப்பெழுத்தை தமிழிலேயே எழுத வலியுறுத்துவது.
3) திருக்குறளை முதன்மைப்படுத்தி தமிழ்நாடெங்கும் பல ஊர்களில் தமிழ்த் திருமணங்கள் நடத்துதல்,
4) நூல்கள் எழுதுதல், சக எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தல்,
5) தமிழ்நாடெங்கும் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், அறிஞர்கள் ஆகியோர்களுக்கு சமூக நல ஆர்வலர்களுக்கும் பரிசுகள், பட்டங்கள், விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துதல்.
6) தமிழ் அறிஞர்களுக்கு விழா எடுத்தல் என பல எண்ணற்ற பணிகளைச் செய்து வருதல்.
நேரிய சிந்தனையோடும், உணர்வாற்றலோடும், கெழுமிய முனைப்போடும் செயலாற்றி வரும் இவர் எங்களது அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், நடுவணரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து தேனியில் நடத்திய சங்கைலக்கிய வார நிகழ்வில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்.
இவரின் தமிழ்ப்பணிகளை பல்வேறு தளங்களில் எமது த.மு.க.ச. மெச்சி,
பாராட்டி மகிழ்ந்துள்ளது.
இவண்
செயலாளர் ப.மோகன்குமாரமங்கலம்
தமிழாசிரியர்,
த.மு.எ.க.ச. தேனி மாவட்ட ஆசிரியர் கிளை,
4/411, பிசுமி நகர்,
தேனிமாவட்டம். 625531
No comments:
Post a Comment