21-12-2023
இன்று தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் தொடக்க உரையாற்ற, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஜெயபாரதி அவர்கள் பேரணியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் தேனி வையைத் தமிழ் சங்கம் சார்பில் கலந்துகொண்டு, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தின்படி தமிழ்நாட்டின் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்! அறிவிப்பு பலகைகளும், பதாகைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும்! கையொப்பங்கள் தனித்தமிழிலேயே இருக்க வேண்டும்! என விழிப்புணர்வுப் பேரணியில் பரப்புரை வழங்கிய இனிய பொழுது....
ச.ந.இளங்குமரன், நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.