தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம், சங்கத்தமிழ் அறக்கட்டளை இணைந்து மூன்று பெண் அரசு ஊழியர்களின் நூல்கள் வெளியீட்டு விழா தேனியில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமை தாங்கினார்.
கவிஞர் பா கவிதா எழுதிய புத்தரின் ஆசை, இலட்சிய ஆசிரியர் அ.லட்சுமி குமரேசன் எழுதிய நிலாச்சோறு, முனைவர் புனிதராணி எழுதிய பக்தி இலக்கியங்களில் பன்னிரு ஆழ்வார்கள் ஆகிய மூன்று நூல்களையும் ச.கந்தசாமி (மரபு அலுவலர் சென்னை, ) அவர்கள் வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார், பெ.இளங்கோ (தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்) அவர்கள் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழ்னக்கினார்.
கவிஞர் சி.ஜெயபாண்டி வரவேற்புரையாற்ற புலவர் இராசேந்திரன் வாழ்த்துரைக்க, கவிஞர் அ.பாண்டிய மகிழன் மா.தங்கப்பாண்டியன், சிவக்குமார் சிங்காரவேல் ஆகிய மூவரும் மூன்று நூல்கள் குறித்து மதிப்புரை வழங்கினர்.
நிகழ்வு ந.வீ.வீ.இளங்கோ, பொன் பாலமுருகன், நீல பாண்டியன், வி.மு.ஜெயதுரை, மா.பால்ப்பாண்டி, முனைவர் யாழ் ராகவன், ஆ.முத்துக்குமார், ஆகியோர். முன்னிலையில் கவிஞர் ராஜிலா ரிசுவான், ஈசுவரன், மு.வேணுகோபால், மு.ஜெயபாரதி, பா.செல்வக்குமரன் ஆகியோர் நூல்களின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.
முனைவர் பத்மினி பாலா அவர்கள் நிகழ்ச்சியை தொகுக்க ப.வேல்முருகன் அவர்கள் நன்றி கூறினார். முன்னதாக செல்வன் ஜெ.திருப்புகழ் அவர்களது பலகுரல் நிகழ்வு நடைபெற்றது. எழுத்தாளர்கள் மூவருக்கும் படைப்பாளர் விருது 2023 வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நூலாசிரியர் மூவரும் ஏற்புரை வழங்கினர்.
நிகழ்வு வையயைச் தமிழ்ச்சங்க வலைத்தளத்தில் நேரலை செய்யப்பட்டது. நிகழ்வில் தேனிமாவட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், நூலாசிரியர்கள் தமிழார்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
27-08-2023