இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 23 December 2019

தமிழ்நாடு நாள் விழா முப்பெரும் விழா.

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் & சங்கத்தமிழ் அறக்கட்டளை தேனி  03-11-2019 ஆம் நாள் நடத்திய "தமிழ்நாடு நாள்" விழா ம் தேனியில் மாயா புத்தக நிலைய மாடியில், மொழிஞாயிறு பாவாணர் அரங்கில் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக தமிழ்நாடு நாள் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கிற்கு தமிழ்ச்சங்கத் தலைவர் வெண்பாவேந்தர் த.கருணைச்சாமி ஐயா அவர்கள் தலைமையில், செயலர் இரா.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்க , திருக்குறள் செல்விகள் அ.சாலினி, அ.சாமினி, அ.ரோசினி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, மு.ஆதிச்செல்வம் தொடாக்கவுரை ஆற்றினார்.

மேனாள் நகர்மன்ற உறுப்பினர் ஆப்பிள் முருகன்,  தமிழாசிரியை தமிழ்ச்செல்வி,ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கல்விப் பதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அ.இருளப்பன் ஐயா அவர்கள் "தமிழ்நாடு" என்ன்னும் பெயர் வைப்பதற்காக எழுந்த போராட்டத்தில் சுமார் 76 நாட்கள் உண்ணா நோண்பிருந்து உயிர்நீத்த ஈ.கி.சங்கரலிங்கனார், தமிழ்நாடு நாள் என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்த பேரறிஞர் அண்ண ஆகியோரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்து உறையாற்றினார். அதன்பின்பு தமிழ்நாடு நாள் கவியரங்கம் இனிதே நடைபெற்றது. கவியரங்கத்தை முனைவர் பத்மினிபால, கவிச்சுடர் மூ.செல்வம், கவியரசு சி.ஜெயபாண்டி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

                                     தேனிமாவட்டத்தின் வரலாறு காணாத கவியரங்கம். தமிழ்நாடெங்குமிருந்து சுமார் 44 கவிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து கவியரங்கத்தில் கலந்து கொள்வதற்காக தங்கலது நேரத்தையும், பொருளையும் இழந்து தமிழ்மொழியின் மேல் பற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காகப் பயணப்பட்டு கவியரங்கில் சிறப்புமிக்கக் கவிதைகளை வாசித்து, வழங்கி  விழாவிற்குப் பெருமை சேர்த்தனர்.இப்படிப்பட்ட கவியரங்கை வேறெங்கும் பார்த்ததில்லை எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.

இரண்டாவது அமர்வு.

முப்பெரும் விழா இரண்டாவது அமர்வு பா.கவிதா கி.நி.அ., அவர்கள் எழுதிய  "எண்ணங்களின் எதுகை" நூல் வெளியீட்டு விழாவாக நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தமிழ் அறக்கட்டலையின் செயலர் மா.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் பெ.அந்தோணிராஜ் அவர்கள் தொடங்கிவைக்க, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி அவர்கள் நூலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார். தேனி மாவட்ட அனைத்து அரிமா சங்கங்கள் செயலர் பெஸ்ட் ரவி,  தேனி.மே.இ.நா.உறவின்முறைச் சொத்துப் பாதுகாப்புச் செயலர் க.ஜெயராம், தேனி மீனாட்சி விலாஸ் இனிப்பகம் ரெ.கந்தசாமி ஆகியோர் நூலின் படிகளைப் பெற்றுச் சிறப்பித்தனர். நூல் குறித்து பட்டிமன்ற நடுவர்  ந.வீ.வீ.இளங்கோ அவர்கள் கருத்துரை வழங்க, எண்ணங்களின் எதுகை நூலாசிரியர் பா.கவிதா.கி.நி.அ., அவர்கள் ஏற்புரை வழங்கினார். நூல் வெளியீட்டு விழா ஒரு மிகச்சிறந்த ஆய்வரங்கமாக, அனைவரும் விரும்பும் வண்ணம் அமைந்தது. நூலாசிரியர் அவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவுப் பரிசினை வழங்கிச் சிறப்பித்தார். எண்ணங்களின் எதுகை அனைவரது இதயம் தொட்ட விழாவக அமைந்தது.