உலகில் தோன்றிய உயிரினங்களை ஆறு பிரிவாகவும் அவற்றின்
அறிவு நிலையினை ஆறு வகையாகவும் வகைப்படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். அதாவது
சுமார் ஈராயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது தமிழ் இலக்கண நூலான
தொல்காப்பியத்தில் இச்செய்தி பதிவாகியுள்ளது.
தொல்காப்பியம் => 3 அதிகாரங்கள் = அவை முறையே 1) சொல் ,2) எழுத்து ,3) பொருள்
என்பனவாகும்.
என்பனவாகும்.
அதில் பொருளதிகாரத்தில் தமிழர் வாழ்வியல் மரபுகளைக்
கூறுகின்ற மரபியல் பகுதியில் தொல்காப்பியர் ஓரறிவு முதல் ஆறறிவு உடைய உயிரினங்களை வகைப்படுத்துகிறார்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
அதாவது ஒரு உயிர்
எப்படியெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவைகளை அறிகின்றதோ அதை வைத்துதான் அந்த உயிர்
எத்தனை அறிவுகள் கொண்டது என்று கருதப்படுகிறது. சரி. தொல்காப்பிய வரிகள் என்ன
சொல்கின்றன என்று பார்க்கலாம்.
ஓரறிவு
- > உடம்பால் உணர்வன ;
ஈரறிவு -> உடம்பு & நாக்கால் உணர்வன ;
மூன்று அறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கால் உணர்வன ;
நான்கறிவு - உடம்பு, நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வன ;
ஐந்தறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காதால் உணர்வன ;
ஆறறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது , மனசு ;
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.
ஈரறிவு -> உடம்பு & நாக்கால் உணர்வன ;
மூன்று அறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கால் உணர்வன ;
நான்கறிவு - உடம்பு, நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வன ;
ஐந்தறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காதால் உணர்வன ;
ஆறறிவு -> உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது , மனசு ;
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.
572 -> ஓரறிவு உயிரினங்கள் எதுவென்று பார்ப்போம்.
புல்லும் மரனும் ஓர்அறி வினவே;
புல்லும் மரனும் ஓர்அறி வினவே;
பிறவும் உளவே, அக்கிளைப் பிறப்பே.
புல்லும் , மரமும் ஓர் அறிவு கொண்டவை. புல் என்பது
அருகம் புல், கோரைப் புல் மட்டும் இல்லை. தென்னை, பனை. பாக்கு, மூங்கில், வாழை, முருங்கை இது எல்லாமே புல்தான்.
மரம் என்பது மா மரம், ஆல மரம் போன்ற பிற வகைகள் மரவகைகளில் சேரும். இதில்
புல்லுக்கும் மரத்திற்குமான் வேறுபாட்டை நாம் எப்படி உனர்ந்து கொள்வது; எது
மரம் ? எது புல் ? என்ற கேள்விக்கு தொல்காப்பியர் சொல்லும் பதிலாவது. வைரம்
பாய்ந்து உறுதியாக இருப்பது மரம் ; மற்றவை = புல் என்பதாகும்;
அடுத்த
வரி : "பிறவும் உளவே" என்பது. அதாவது மரம்
, புல்
மட்டும் இல்லை ; இன்னும் கொஞ்சம் ஓரறிவு உயிர்கள் உள்ளன ; அது தாமரை , கழுநீர்
என இந்த இரண்டும் ஓரறிவு உயிர்தான் ; தாமரை தெரியும் ; அது
என்ன கழுநீர் ?? என்றால் குளத்தில்
தேங்கி நிற்கின்ற தண்ணீரில் இருக்கும் "பாசி". யாகும்.
இந்த செய்தியை அறிவியல் பூர்வமாக கருவிகொண்டு
நிறுவுவதற்கு தோராயமாக ஈராயிரத்து எண்ணூறு ஆண்டுகள் ஆகியுள்ளது. அதாவது 1900
மாவ்து ஆண்டில் அறிவியல் ஆய்வாளர் சகதீசசந்திரபோசு அவர்கள் தாவரங்களை ஆய்வு செய்து
அவற்றுக்கு உயிர் உண்டு என்று மெய்ப்பித்தார் என்பது நிகழ்கால வரலாறாக இருக்கிறது.
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
ஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.
ஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.
573 -> இனி ஈரறிவு உயிரினங்கள் எதுவென்று பார்ப்போம்.
நந்தும் முரளும் ஈறிவினவே;
பிறவும் உளவே, அக்கிளைப் பிறப்பே.
நத்தை , சங்கு, சிப்பி, கிளஞ்சில் => ஈரறிவு உயிரினங்கள்
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
உடம்போடும் நாவோடும் அறிவதோடு மூக்கினாலும் அறிகின்ற உயிர்களை மூன்றறிவுள்ளவை என்பார்கள். மூக்கினால் நாற்றங்களையும் அந்த உயிரினங்கள் அறிந்துகொள்ள முடியும்.
574->மூன்றறிவு உயிரினங்கள்:
சிதலும் எறும்பும் மூன்றறிவினவே;
பிறவும் உளவே, அக்கிளைப்
பிறப்பே.
ஈசல், எறும்பு ; போன்றவைகளும் "பிறவும் உளவே"என்பதால் =>அட்டை போன்றவைகளும்
மூன்றறிவு உயிரினங்களாகும்.
நான்கு
அறிவதுவே அவற்றொடு கண்ணே
உடம்பு, நாக்கு. மூக்கு ஆகியவைகளோடு கண்களாலும் உணர்வது நான்கறிவு எனப்படும்.
இந்த நான்காவது அறிவினால் மூன்று அறிவுகளை அறிவதோடு கூடுதலாகக் கண்களால்
நிறங்களையும் உருவங்களையும் அறிய முடியும்.
575>நான்கறிவு உயிரினங்கள்:
நண்டும் தும்பியும் நான்கறி வினவே;
பிறவும் உளவே, அக்கிளைப் பிறப்பே.
நண்டு,
தும்பி ;
"பிறவும் உளவே" = ஞிமிறு (தேனீ) , வண்டு
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஐந்து விதமான அறிவுகளை உணர்வதற்கு உடம்பு, வாய், மூக்கு, கண்களோடு செவியும் உதவுகின்றது. நான்கு அறிவுகளோடு கூடுதலாக செவியினால் ஓசைகளை ஐந்தறிவு உயிர்கள் அறியும்.
576 >
ஐந்து அறிவு உயிரினங்கள்:
மாவும்
மாக்களும் ஐஅறிவினவே;
பிறவும் உளவே, அக்கிளைப்
பிறப்பே.
பறவைகள் , நான்கு கால் விலங்குகள் ; "பிறவும் உளவே" = எட்டு கால் விலங்குகள் :
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
ஐந்து அறிவுகள் மாக்களோடு நிற்க, ஆறறிவினால் மனிதன் மேலும் உணர்ந்தான். அதற்குக் காரணம் அவனுடைய மனம். அந்த மனதினால் உண்டாகும் சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவாகும். அறிவு என்பது அறிந்துகொள்வது. அதாவது இவன் மனிதன், இது விலங்கு, இது நல்லது, இது கெட்டது என பகுத்துப் பார்க்கும் அறிவே ஆறாவது அறிவாகும். இந்த ஆறு அறிவுகளும் மனிதனின் படிநிலை வளர்ச்சியில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஆறு படிநிலைகளைக் கடக்கிறான்.
ஒரு
குழந்தை பிறக்கிறது; பிறந்ததும் அழுகின்றது; அதன் அழுகையை நிறுத்த விரும்பும்
தாய் எடுத்து அணைக்கிறாள்; தாயின்
அரவணைப்பு குழந்தையின் அழுகையை நிறுத்துகிறது; அக்குழந்தைக்கு தொடுவுணர்வாகிய மெய்யுணர்வு அதாவது உற்றறிவு அப்பொழுது
செயல்படத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாகவே குழந்தை தன் அழுகையை நிறுத்துகிறது. இது
முதல் நிலை.
பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் நாவில் தேனும் நெய்யும் கலந்து
வைப்பர். ‘தேநெய்’ என்பது அது. அது பசுவின் நெய்யாதலால் சேநெய் என்று சொல்லப்படும். சேநெய்
நாவில் பட்டவுடன் குழந்தை சப்புக்கொட்டிச் சுவைக்கத் தொடங்கும். அப்பொழுது
நாச்சுவை வேலை செய்யத் தொடங்கிவிட்டது. இது இரண்டாம் நிலை.
குழந்தை வேண்டாத வாடை அல்லது குளிர் வந்தபோது தும்முகின்றது.
அப்பொழுது மூக்கறிவு வேலை செய்யத் தொடங்கிவிட்டது. இது மூன்றாம் நிலை.
குழந்தை பிறந்து சிலநாட்கள் வரையும் குழந்தைக்கு கண்ணிமை
திறப்பதில்லை. உடல், நாக்கு, மூக்கு ஆகிய இம்மூன்றும் தங்களுடைய கடமையைச்
செய்யத் தொடங்கிய பின்னர் வருவது கண்ணின் வழியே தோன்றும் க்கட்சியறிவாகும்.
அப்பொழுது குழந்தை தன்னை நெருங்குபவரையும், தூக்கி அரவணைப்பவரையும் பார்க்கத் தொடங்குகிறது. இது நான்காம் நிலை.
இதுவரையிலும் குழந்தைக்கு செவியறிவு செயல்படவில்லை. கண்ணின்
வழியே தோன்றும் காட்சியறிவு உண்டான பின்னரே செவியறிவு செயல்படத் தொடங்குகிறது. அதற்குமுன்
எந்த ஒலியைக் கேட்டாலும் உணர்வு காட்டத குழந்தை கண்ணறிவு உண்டானபின் உண்டான
செவியறிவால் கையைத் தட்டினாலோ, கிலுக்கை
ஆட்டினாலோ திரும்பிப் பார்க்கிறது. இப்பொழுது அதற்கு செவியறிவு செயல்படத்
தொடங்கிவிட்டது. இது ஐந்தாம் நிலை.
இதற்குப் பின்னரே மன அறிவான ஆறாம் அறிவு பட்டிப்படியாகத் தோன்றி
வளரத்தொடங்குகிறது. முந்தைய ஐந்து அறிவுகளும் அடுத்தடுத்துத் தோன்றிவிடும். ஆனால்
ஆறாம் அறிவான மன அறிவு நீண்ட இடைவெளிக்குப்பின் சிறிதுசிறிதாகத் தோன்றி
படிப்படியாக வளரும் தன்மையுடையது. இது ஆறாம் நிலையில். இந்த நிலையில்தான் குழந்தை
ஒவ்வொன்றையும் புறிந்து செயல்படத் தொடங்குகிறது.
இது
தொல்காப்பியரின் உயிரியல் ஆய்வாகும். அதையும் அவர் தனக்கு முன்னர் இருந்தவர்கள்
உணர்ந்து நெறிபடுத்தினார்கள் என்று சொல்வது வியப்பாகவும், அதேசமயம் பண்டைய நாளில் தமிழர்களின் அறிவியல்
திறத்தை நமக்கு உணர்த்துவதாகும் உள்ளது. அதுமட்டுமல்ல இதுநாள் வரையில் ஆறாம்
அறிவுக்கு மேற்பட்ட ஏழாம் அறிவியையும் எவரும் கண்டறியவில்லை என்பதும் அறிவியல்
உலகின் வரலாற்றுப் பதிவாகவும் உள்ளது என்ற நிலையில் நாம் ஏழாம் அறிவை நோக்கிச்
சிந்திப்போம்.
இன்று
ஆறாம் அறிவின் படிநிலை வளர்ச்சியில் வியத்தகு விந்தைகள் நிகழ்ந்து
கொண்டிருகின்றன். மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகை ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கின்றன் என்றால் அது மிகையல்ல. எங்கேயோ ஓர் அறைக்குள் இருந்துகொண்டு
ஒலிபரப்பாகும் நிகழ்வுகளை வேறு ஒரு மூலையில் இருப்பவர்கள் கேட்கும் அளவில்
வடிவமைக்கப்பட்ட வானொலி நிகழ்வுகளைத் தாண்டி படத்தோடு பார்ர்க்கும் அளவில்
தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டை ஆளுமை செய்கின்றன.
இதுவும் கடந்து ஒருபடி மேலாக உல்கில் நடக்கும் ஒவ்வொரு
நிகழ்வுகளையும் உள்ளங்கைகளுக்குள் கொண்டுவந்து கொடுக்கும் நிலையில் அலைபேசி
ஒவ்வொரு மனிதனின் அன்றாடத் தேவையாக மாறிவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாம்
எழுதுகின்ற தட்டச்சு செய்கின்ற செய்தியினை கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி வாசிக்க
முடிகிறது.
நிலாவில்
ஒளவைப்பாட்டி குடியிருக்கிறாள் என்ற கற்பிதங்கள் மாறி நிலவில் இருப்பதாகச்
சொல்லப்படுகின்ற எரிபொருளை எடுத்துவந்து பூமியின் எரிபொருள் தேவையை எப்படித்
தீர்க்கலாம் என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதையும் தாண்டி செவ்வாய் கோளில்
குடியேறுவதற்கான அதாவது ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளுக்குப் பயனம் செய்வதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்டவெளிகளை ஆய்வு செய்வதற்கான கருவிகளை உருவாக்கியது மானிதனின்
ஆறாம் அறிவு என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. தற்பொழுது வெளிநாடுகளில் இயந்திர மனிதன்(ரோபோ)
வடிவமைக்கப்பட்டு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையில் பங்கெடுக்கும்
செவிலியர்களாகப் பனி செய்யத் தொடங்கிவிட்டன. மனிதன் செய்யும் வேலையைவிட பலமடங்கு
வேலைகளை இவைகள் செய்கின்றன.
அண்டவெளியில்
சுற்றும் கோள்களைப்போலவே மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்களும் அதன்
வட்டத்தில் மாறாமல் சென்று சுற்றி வருவதோடு அண்டவெளியில் நிகழும் செய்திகளைக்
கவணித்து அதனை படமாக்கி அனுப்புகிறது என்றால் அதன் அறிவை என்னவென்று சொல்வது.
இந்த்கோணத்தில் நாம் சிந்தனை செய்யும் பொழுது எந்திரன் திரைப்படத்தில் இடம்பெற்ற
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
புதிய மனிதா பூமிக்கு வா
எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி ......
எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி ......
என்பது அது.
ஆறு அறிவுகளால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கி
அந்த எந்திரனுக்கு ஏழாவது அறிவைத் தட்டி எழுப்பும் முயற்சியை “ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை
எழுப்பும் முயற்சி” என்று எழுதியிருக்கிறார்.
உயிருள்ளவைகளுக்கு
உள்ளது அதிகபட்சமாக ஆறு அறிவுகள்தான். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட
எந்திரத்துக்கு உண்டாவது ஏழாவது அறிவு என்பது ஒரு அறிவார்ந்த கற்பனைதான் என்றாலும்
அதை ஏழாம் அறிவு என்று கொள்வது தவறிலில்லை என்றே தோன்றுகிறது.
மனிதனோடு பிறந்தது ஆறாம் அறிவு என்றால் மனிதனால் உருவாக்கப்பட்டது ஏழாம் அறிவாகும். இன்னும்
சொல்லப்போனால் எழாம் அறிவு என்பது வியக்கவைக்கும் அறிவாகும். அதாவது ஆறாம் அறிவின்
துணையோடு எழாம் அறிவு இயங்கும். இன்னும் சொன்னால் ஆறாம் அறிவு இயக்குவது, ஏழாம் அறிவு
இயங்குவது.
புலவர் ச.ந. இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்
நாகலாபுரம்-தேனி.